




மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.
மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்” பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார். ஆர்தர் ஜாக்சன்
சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் கடலில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் படகின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார்.
அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.
நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவன் ஊக்குவிப்பதை உணர்ந்து, ஒரு எழுத்தாளராக ஊழியத்தில் அவரைப் பின்தொடர நான் ஒரு நிறுவன வேலையைத் துறந்தேன். இருப்பினும், நான் உடனடி விளைவுகளைப் பார்க்கவில்லை. மாற்றமாகிக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெளியீட்டாளர் என்னை நிராகரித்ததை போல எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. முற்றிலும் ஏமாற்றமடைந்த நான், “தேவன் ஏன் என்னை அழைத்தார்?” என்றும் விட்டுவந்த வேலைக்கே திரும்பவும் எண்ணினேன். அப்போதுதான் அவர்களுக்கு எனது புத்தகத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியென்றும், நான் மேலும் அதனை எழுத வேண்டும் என்றும் மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அதுமுதற்கொண்டு, நான் கற்பனை செய்யாத வழிகளில் தேவன் என்னைப் பயன்படுத்துகிறார்.
என் பயணம் பேதுருவை எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் தனது மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அவரை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75). அவர் தன்னை குறித்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும் (வ.75). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஒருவேளை தன்னைத் திசைதிருப்பிக்கொள்ள, பேதுரு தனது சகாக்களுடன் மீண்டும் மீன்பிடிக்க பரீட்சயமான நீர்நிலைகளுக்குச் சென்றார் (யோவான் 21:3). விடிந்தபோது, அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை (வ.3). மாறாக, அவர்கள் கடற்கரையில் இயேசுவைக் கண்டார்கள் (வ.4). வலைகளை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களிடம் கூறி, காலை உணவுக்கு வரும்படி அழைத்தார் (வ.6-13)). அவர் பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" (வ.15) என்று பேதுருவின் அழைப்பைப் புதுப்பித்தார்.
தேவன் நம்மை அழைக்கும்போது, காரியங்கள் உடனே வாய்க்காமல் போகலாம். நம்மை நாமே நொந்துகொண்டு, விளைவுகளைக் குறித்து சந்தேகம் கொள்ளலாம். ஆனால் தேவன் நம்மைப் பயிற்றுவிக்கவும் சுத்தம் பண்ணவும் அந்த காலத்தைப் பயன்படுத்துகிறார், அதனால் அவர் நம்மை தம் மகிமைக்காகப் பயன்படுத்த முடியும் (யோவான் 15:2). எனவே, பலன்களைக் காணாதபோது, பின்னிட்டு, பரீட்சயமான தண்ணீருக்குத் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, தேவனின் நேரத்தை நம்பி பொறுமையாகக் காத்திருப்போம்.